Friday, 28 February 2014

முடியுமென்றால் சொல்

உன்னை "சகோதரா " என்றழைக்கவே
ஆசைப்படுகிறேன் ...

அச்சொல் உனக்குள்
என்னவோ செய்யுமென்பதையும்
விண் விண் னென்று காதுகள்
விடைத்துத்  தெறிக்கும்  என்பதையும்
நான் அறிவேன் ..

என்றாலும் என் ஆசையை
விட்டுவிட நான் விரும்பவில்லை

சகோதரா ,

கோடு போடுதலை விட
ரோடு போடுதல் பெரிது

ஒப்பித்தலைவிட
உண்டாக்குதல் பெரிது

நெற்றி சுருக்கத்தை விட 
நெற்றி வியர்வை பெரிது

உணவு மேலாண்மையை விட
உற்பத்தியே பெரிது

உலகச்  சுகாதார உச்சிமாநாட்டை விட
ஊரைத்  துப்புரவு செய்தல் பெரிது


மத சாஸ்திரங்களை விட
மனித அன்பு பெரிதோ பெரிது .

உன்னால் முடியுமென்றால் சொல்
பெரிதுகளை செய்து காட்ட  .....


சரியென்று வருவாயெனில்

பிறகென்ன ,
நீக்கி விடலாம் எல்லா
சலுகை மயிர்களையும் .






2 comments:

  1. சூப்பர்.இந்த துணிவு எல்லோருக்கும் வருமெனில்...வளம் நம்மை நோக்கி...

    ReplyDelete
  2. அருமை தோழ்ர்....ஆனால் என்ன சொன்னாலும்,எப்படி சோன்னாலும் சொரனை வரமாட்டேங்குதே.....

    ReplyDelete