Posts

அவளும் அந்த ஏழு நாட்களும்

மௌனச்சிறுகதை


இது மௌனச்சிறுகதை . பேச்சு, வர்ணனை, விவரிப்பு,உவமம், எண்ணஓட்டம் போன்ற கதைசொல்லும் உபகரணங்கள் ஏதுமின்றி புறக்காட்சிகளால் மட்டுமே அடுக்கப்பட்டு இயங்கிச்செல்லும் கதை இது.

இந்தக் கதையின் வரிகளை வழக்கம் போல்
வாசிக்காமல் ஒவ்வொரு வார்த்தையையும் வரியையும் வாசித்தபின் நிறுத்தி அவற்றை அகக்காட்சிகளாய் உணர்ந்து பின் அடுத்த வார்த்தைக்குச் செல்லுங்கள்.

இவ்வகையில் இக்கதை ஒரு கூட்டுப்படைப்பாளியாய் இயங்கிட வாசகரைக் கோருகிறது.

  ******      ******

பஸ் வந்து நிற்கிறது. அவன் ஏறுகிறான் .பஸ் நகர்கிறது பஸ் ஓடி நிற்கிறது.அவள் ஏறுகிறாள் .ஏறியதும் அவன் பக்கம் பார்க்கிறாள்.அவனும் பார்க்கிறான். பேருந்து நிலையத்தில் பஸ் நின்றதும் இறங்கி வெவ்வேறு பக்கம் நடக்கிறார்கள்.காலை செய்தித்தாளின் தலைப்பில் ‘முதல்வர் பதவியேற்பு’.பஸ்ஸில் ஏறியவளை அவன் பார்க்கிறான்.அவள் வேறுபக்கம் பார்த்துவிட்டுஇ அவன் திரும்பியதும் பார்க்கிறாள். அவள் முகத்தில் புன்னகை.

                                ******      ******

     மழை.  குடைகளை பிடித்தபடி ஆட்கள். சாலையில் வெள்ளம். மழை. தூறல்.
மழை. புது வருட காலண்டர் மாட்டப்படுகிறது. பள்ளி…

குடியரசு தின சிறப்புக் கருத்தரங்கம்

Image

வேதக்கவியும் எழுதாக்கிளவியும்

வேதங்களின்உள்ளடக்கம்- அறநெறிப்பண்பு கொண்டவையா 
என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் எழுதிய கட்டுரைகளை மருத்துவர் நா. ஜெயராமன் தொகுத்துள்ளார்.

அந்நூலுக்கு நான் எழுதியுள்ள அணிந்துரை. -------------------------------------------------------------------------------------------

2019  மார்ச்ஏப்ரல் மாதங்களில் தமிழகமெங்கும் கடும் வறட்சி நிலவியது அச்சூழலில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பணீந்திரரெட்டி அத்துறையின் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் 
“வரும் 2019-2020 ஆம் ஆண்டு விகாரி வருடத்தில் நல்ல பருவமழை பெய்து நாடுசெழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கீழ்கண்ட நிகழ்ச்சிகளை தத்தம் பிரிவில் உள்ள கோயில்களில் அந்தந்தக் கோயில்களின் பழக்க வழக்கத்திற்கு உட்பட்டு நடத்திட அனைத்து செயல் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம், வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், அருள்மிகு நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின…
Image
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்” வருக! வருக!!

கணினித்தமிழ்ச்சங்கம்புதுக்கோட்டை இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 

இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி (அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)
பங்கேற்பாளர்கள்இணையஇணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினிகொண்டுவருதல் நல்லது. மற்றவர்க்குசெய்துதர முயற்சி செய்வோம் இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக  ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.
பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்
தலைமை முனைவர் 

சில கழிப்புகளும் ஒரு நிர்வாணமும்

முதலாளி போகச் சொல்லிவிட்டார் என்பதால்காரணம் ஏதும் கேட்காமலே அந்த வீட்டுக்குச் சென்றேன்.
அது ப வடிவிலான வாடகைக் குடியிருப்பு. மதிய நேரத்து அமைதியில் சிலோன் ரேடியோவின் ஒலிச்சித்திரம் தவழ்ந்து கொண்டிருந்தது . மெல்லிய புகையோடு கலந்த சாம்பார் வாசம் பசியைக் கிளப்பியது 

மையத்தில் இருந்த பெரிய வேப்ப மரத்தடியில் சைக்கிளை சாத்திவைத்தேன் (ஸ்டான்ட் பழுது). வேப்ப மரத்தின் பூக்கள் உதிர்ந்து கம்பளமாய் கிடந்தன. உணவுநேரத்து காக்கைகள் வந்து கூடியபடி கரைந்தன .

வேட்டியை இறக்கி சரிசெய்து கொண்டு வலது பக்கம் இருந்த மூன்றாவது வீட்டைப் பார்த்தேன். ஏற்கனவே அந்த வீட்டுக்கு நான் வந்திருக்கிறேன். அது நெல்லுக்கடை சண்முகம் என்பவரின் வீடு. அவர் நான் வேலைபார்த்த துணிக்கடை முதலாளியின் நண்பர்  பள்ளியிறுதி வகுப்பு முடித்துவிட்டு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டேன்.பள்ளியிறுதியில் நான் மாவட்ட முதலிடம் பெற்றிருந்தாலும் வீட்டுக்கு அரிசி பருப்புக்காக  நான் வேலைக்குப் போகவேண்டியிருந்தது.அந்த ஒருவருட காலத்திற்குள்ளேயே  முதலாளி குமாரண்ணனிடம் எனக்கு ரொம்ப நல்லபெயர்.  முதலில் விற்பனைக்கவுண்டரில் நின்ற நான்  அப்போது கல்லா…