Sunday, 11 December 2011

எனது கவிதைகள்

எண்பதுகளில் எனது கவிதைகள்-4 


1  காட்டுச் சிறுவர்கள் 
      எண்ணி விளையாடுகிறார்கள்
      பாம்பின் தடங்களை .


2   பனித்துளிகள் 
     முத்துக்கோர்த்திருக்கின்றன
     மிளகுக் கொடிகளில்.


 3  நீண்ட இரவுச் சாலையில் 
    இரு சக்கர வாகன ஒளியில் 
    குறுக்கே நழுவும் பாம்புகள் .


4   சில்லுவண்டுகளின் பேரிரைச்சல் 
     நின்றதொரு காட்டில் 
     அலறுகிறது நிசப்தம் .


5   முளைத்துக் கிடக்கின்றன 
     நவதானியத் தளிர்கள் 
      மூன்றாம்நாள் தெளித்த பால் .


6    தூரத்தில் தெரியும் 
      அருவியின் சாரல், 
      நீர் புகைகிறது 


7   கிளிகள் எல்லாம் 
     ஆண்பால்தான் ,
     கனிகளைக் கேளுங்கள் .  


8  ஒப்பாரியோடு சேர்ந்து 
    தானும் அழுகிறது 
    மழையில் நனைந்த பறை .



2 comments:

  1. இயற்கையின் இயல்பினை ஏற்றநல் உவமைகளோடு
    இயைத்து வடித்த எழிலார்ந்த குறுங்கவிதைகள். பாராட்டுகள். பாவலர் பொன்.க.

    ReplyDelete
  2. அன்புள்ள கவிஞர் திருமிகு.ராசி. பன்னீர் செல்வன் அவர்களுக்கு,
    தங்களின் கவிதைகள் அனைத்தும் அருமை. பொறுமையாகப் படிக்க வேண்டும்...படிக்க நிறைய இருக்கிறது...

    ‘சிற்றலகு பிளந்து நாத்துடிக்கும்
    பிஞ்சுக் குஞ்சுகளின் கீச்சொலி நீங்காது
    இரைசேர்க்கும் பெண் புள்.

    குட்டிகளைத் தன்னோடு ஒட்டிக்கொண்டு
    உச்சிக்கிளை வளைத்தாடும் மந்தி

    வளைத்ததில் சிதறி பின்
    வடிவமாய் அடைசேரும் தேனீ ’

    கூடங்குளம்-
    ஐம்பது ஆண்டு காலம் மட்டுமே
    இயங்கப்போகும் இது
    ஐயாயிரம் ஆண்டுகால பாதுகாப்பிற்கு
    வைத்திருக்கிறது உலை.
    ஐம்பது ஆண்டு காலம் மட்டுமே
    இயங்கப்போகும் இது
    ஐயாயிரம் ஆண்டுகால பாதுகாப்பிற்கு
    வைத்திருக்கிறது உலை.
    ஐம்பது ஆண்டு காலம் மட்டுமே
    இயங்கப்போகும் இது
    ஐயாயிரம் ஆண்டுகால பாதுகாப்பிற்கு
    வைத்திருக்கிறது உலை.

    ஐம்பது ஆண்டு காலம் மட்டுமே
    இயங்கப்போகும் இது
    ஐயாயிரம் ஆண்டுகால பாதுகாப்பிற்கு
    வைத்திருக்கிறது உலை.

    ஐம்பது ஆண்டு காலம் மட்டுமே
    இயங்கப்போகும் இது
    ஐயாயிரம் ஆண்டுகால பாதுகாப்பிற்கு
    வைத்திருக்கிறது உலை.


    தேர்தல் உட்பட
    அரசின் செயல்பாடுகளுக்கும்
    மக்கள் விருப்பத்திற்கும்
    எவ்வித தொடர்பும் இல்லையென்பது
    மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
    நன்றாக இருக்கிறது. அருமை. வாழ்த்துகள்.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete