தொன்னூறுகளில் எனது கவிதைகள் -1
1ஆயபயன்
'புலி மானை துரத்தியது
மானும் மிரண்டு ஓடியது'
'பிறகேன் மானுக்கு
அத்தனை கொம்புகள்?
கூர் கூராய் கிளர்ந்து
கிளை கிளையாய்அடர்ந்து'
மரங்களினிடையே சிக்கிக்கொண்டு
புலிக்கு வாகாய் உணவாகிட !
2அநிர்வாணி
உன் கொசுக்கள்
கூட்டமாய் கடிக்கின்றன
என் நிர்வாணத்தை.
உன் பிழம்புகள்
எரித்து மலர்த்துகின்றன
என் ஆடைகளை.
உன் சிறகசைப்புகள்
அசாத்தியப்படுத்துகின்றன
என் இருத்தலை.
நடுக்கடல் குருவியாய்
மாந்திப்போகிறேன் நான்.
உன் கடல் கடந்து மரிப்பேனா
உன்னில் மூழ்கி உயிர்ப்பேனா
தெரியலையே இன்னும் .
3 கொலுசுக்கால்களுடன் ஜல்
மெல்ல ஜல்
அடிவைத்து ஜல்
என் அறைக்குள்ளே ஜல்
நீ வந்தாய் ஜல் ஜல் .
மெல்ல எழுந்து
நான் வெளியே போனேன்
உள்ளே அவனும் அவளும் .
கொம்பில்லா மான்களும்
ReplyDeleteகொடும்புலி வாய்ப்படும்
கொடுமைதான் மாயுமோ?
நிர்வாணிகளுக்கு அசாத்தியங்கள்
அநிர்வாணிகளுக்கு
அனைத்தும் சாத்தியமே
குறும்பாக்களின் உள்ளீடுகள்
ஜல்..ஜல்...ஜல். --பாவலர் பொன்.க
90 களில் என்னுள் நிறைய பாதிப்பை ஏற்படுத்திய கவிதை 'கொளுசுக்காலுடன் ஜல்'. ஆனால் இதில் முழு கவிதையும் இல்லை.
ReplyDeleteமுழுக்கவிதை;
கொளுசுக்கால்களுடன்
ஜல்
மெல்ல அடிவைத்து
ஜல்
நீ
ஜல்
வந்தாய்....... ஜல் ஜல்
மெல்ல எழுந்து
நான் வெளியே போனேன்;
என் பின்னே நீயும் வந்தாய்
நானும் நீயும்
பரிதாபமாய் விழித்தபடி
வெளியில் நிற்க.....
உள்ளே
அவனும் அவளும்.
நன்றி. மு. நட்ராஜ் , புதுப்பை.
nattrackpup@gmail.com