14.02.2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்
சங்க கலை இலக்கிய இரவில் நான் எழுதி வாசித்த கவிதை
(அவை கிரிக்கெட் உலகக் கோப்பை நாட்கள்)
-------------------------------------------------------------------------------
0 கூடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம் --மக்களை
பிரித்துப் பார்க்கும் கோழைகளுக்கு எதிர்வணக்கம் .
சட்டையை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம்
சாதியைப் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர் வணக்கம்.
வெள்ளை அணுக்களும் சிவப்பணுக்களும்
ஓடும் ரத்தங்களுக்கு வணக்கம் .
வர்ண அணுக்கள் ஓடும் ரத்தங்களுக்கு எதிர் வணக்கம்
மேலும்
வணங்கத் தகுதியற்றோரை
வணங்காமல் இருப்பவர்களுக்கு வணக்கம் .
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்
சங்க கலை இலக்கிய இரவில் நான் எழுதி வாசித்த கவிதை
(அவை கிரிக்கெட் உலகக் கோப்பை நாட்கள்)
-------------------------------------------------------------------------------
0 கூடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம் --மக்களை
பிரித்துப் பார்க்கும் கோழைகளுக்கு எதிர்வணக்கம் .
சட்டையை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம்
சாதியைப் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர் வணக்கம்.
வெள்ளை அணுக்களும் சிவப்பணுக்களும்
ஓடும் ரத்தங்களுக்கு வணக்கம் .
வர்ண அணுக்கள் ஓடும் ரத்தங்களுக்கு எதிர் வணக்கம்
மேலும்
வணங்கத் தகுதியற்றோரை
வணங்காமல் இருப்பவர்களுக்கு வணக்கம் .
0 உலகக் கோப்பை விளையாட்டு
உங்கள் வீட்டுக்குள் நடக்கிறது
காடு கழனி குளத்தையெல்லாம்
கட்டாந்தரை பொட்டலாக்கி
கம்பு நட்டு கனவை வீசி
நீங்கள் ஆடும் விளையாட்டு
உங்கள் அறைகளில் நடக்கிறது .
கோப்பையைத் தக்க வைக்க
அனைவருக்கும் ஆசைதான்
உங்கள் வீட்டுக்குள் நடக்கிறது
காடு கழனி குளத்தையெல்லாம்
கட்டாந்தரை பொட்டலாக்கி
கம்பு நட்டு கனவை வீசி
நீங்கள் ஆடும் விளையாட்டு
உங்கள் அறைகளில் நடக்கிறது .
கோப்பையைத் தக்க வைக்க
அனைவருக்கும் ஆசைதான்
என்றாலும்
உலகக் கோப்பை ஒருபுறம் இருக்கட்டும்
இந்தியக் கோப்பைகளை கொஞ்சம் பார்ப்போம்
உலகக் கோப்பை ஒருபுறம் இருக்கட்டும்
இந்தியக் கோப்பைகளை கொஞ்சம் பார்ப்போம்
0 தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றிகோப்பைகளில்
நிரம்பி வழிகின்றன
மதுக் கோப்பைகளும் மட்டற்ற பணமும்
வாக்குப் பதிவின் பொத்தானை
அமுக்கியதுமே அலறுகிறது
நரிகளின் ஓலம் .
நல்ல மேய்ப்பர்கள் என்று நம்பி
அடைக்கலம் தேடும் ஆட்டுக்குட்டிகளே
அவர்கள் மேய்ப்பவர்கள் தான்
ஆனால் அசைவ மேய்ப்பவர்கள் .
நிரம்பி வழிகின்றன
மதுக் கோப்பைகளும் மட்டற்ற பணமும்
வாக்குப் பதிவின் பொத்தானை
அமுக்கியதுமே அலறுகிறது
நரிகளின் ஓலம் .
நல்ல மேய்ப்பர்கள் என்று நம்பி
அடைக்கலம் தேடும் ஆட்டுக்குட்டிகளே
அவர்கள் மேய்ப்பவர்கள் தான்
ஆனால் அசைவ மேய்ப்பவர்கள் .
0 வாக்குறுதி கோப்பையேந்தி
வாசல்தோறும் வந்தவர்கள்
தங்கள் கோப்பைகளில்
அதிகாரத்தை நிரப்பினார்கள்
உங்கள் கோப்பைகளில்
வறுமையை நிரப்பினார்கள்
முதலாளிகளின் கோப்பைகளில்
நாட்டையே நிரப்பினார்கள்
இளைஞர்களின் கோப்பைகளை
கனவுகளால் நிரப்பினார்கள்
கனவுகளை தாயரிக்கும் பொறுப்பை
பன்னாட்டு நிறுவனக்
கல்லாக்களில் நிரப்பினார்கள் .
வாசல்தோறும் வந்தவர்கள்
தங்கள் கோப்பைகளில்
அதிகாரத்தை நிரப்பினார்கள்
உங்கள் கோப்பைகளில்
வறுமையை நிரப்பினார்கள்
முதலாளிகளின் கோப்பைகளில்
நாட்டையே நிரப்பினார்கள்
இளைஞர்களின் கோப்பைகளை
கனவுகளால் நிரப்பினார்கள்
கனவுகளை தாயரிக்கும் பொறுப்பை
பன்னாட்டு நிறுவனக்
கல்லாக்களில் நிரப்பினார்கள் .
உலகக் கோப்பை ஒருபுறம் இருக்கட்டும்
இந்தியக் கோப்பைகளை பழுது பார்ப்போம்
இந்தியக் கோப்பைகளை பழுது பார்ப்போம்
0 இந்திய மைதானத்தில் எப்போதுமே
வர்ண விளையாட்டுத்தான்
பிறக்கும் போதே அம்பயராய் பிறந்தவர்கள்
பிறக்கும் போதே பந்தோடு பிறந்தவர்கள்
பிறக்கும் போதே மட்டையோடு பிறந்தவர்கள்
பிறக்கும் போதே கீப்பராய் பிறந்தவர்கள்
பிறக்கும் போதே பந்து பொறுக்க பிறந்தவர்கள் என
இந்திய மைதானத்தில் எப்போதுமே
வர்ண விளையாட்டுத்தான்.
வர்ண விளையாட்டுத்தான்
பிறக்கும் போதே அம்பயராய் பிறந்தவர்கள்
பிறக்கும் போதே பந்தோடு பிறந்தவர்கள்
பிறக்கும் போதே மட்டையோடு பிறந்தவர்கள்
பிறக்கும் போதே கீப்பராய் பிறந்தவர்கள்
பிறக்கும் போதே பந்து பொறுக்க பிறந்தவர்கள் என
இந்திய மைதானத்தில் எப்போதுமே
வர்ண விளையாட்டுத்தான்.
விளையாட்டோ ஒருபோதும் முடிவதில்லை
விலைக்கு வாங்கிய கோப்பையைக் காட்டும்
வீராப்பு மட்டும் குறைவதில்லை.
விலைக்கு வாங்கிய கோப்பையைக் காட்டும்
வீராப்பு மட்டும் குறைவதில்லை.
0 காதலர்கள் தம் கோப்பைகளை
தென்றலில் ஊறிய மலர்களால் நிரப்புகிறார்கள்
நிலவின் பாலில் கலந்து சுவைக்கிறார்கள்
அவர்களின் "வாய்கள்" பெயர்களை
சொல்லிச் சொல்லிப் "பார்க்கின்றன '"
"கண்கள்" ஒன்றுடன் ஓன்று "பேசுகின்றன"
"காதுகள்" கொலுசின் ஒலியைச் "சுவாசிக்கின்றன"
"மூக்கோ" கூந்தல் மலர் மொழி "கேட்கிறது"
மெய்யோ அடிக்கடி பொய்யாய்ப் போகிறது
இந்த காதலில் மட்டும் தான்
ஐம்புலன்கள்
தங்கள் கடமைகளை க் கூட
மாற்றிக் கொள்கின்றன...
புலன்களே மாற்றி கொள்ளும் போது
குலங்கள் மாற்றிக் கொண்டால் என்ன ...
தென்றலில் ஊறிய மலர்களால் நிரப்புகிறார்கள்
நிலவின் பாலில் கலந்து சுவைக்கிறார்கள்
அவர்களின் "வாய்கள்" பெயர்களை
சொல்லிச் சொல்லிப் "பார்க்கின்றன '"
"கண்கள்" ஒன்றுடன் ஓன்று "பேசுகின்றன"
"காதுகள்" கொலுசின் ஒலியைச் "சுவாசிக்கின்றன"
"மூக்கோ" கூந்தல் மலர் மொழி "கேட்கிறது"
மெய்யோ அடிக்கடி பொய்யாய்ப் போகிறது
இந்த காதலில் மட்டும் தான்
ஐம்புலன்கள்
தங்கள் கடமைகளை க் கூட
மாற்றிக் கொள்கின்றன...
புலன்களே மாற்றி கொள்ளும் போது
குலங்கள் மாற்றிக் கொண்டால் என்ன ...
இவர்கள்
காதலர் தினத்தை படமெடுத்து ஓட்டுவார்
காதல் கோப்பை மேல் ரயிலைவிட்டு ஓட்டுவார் .
காதலர் தினத்தை படமெடுத்து ஓட்டுவார்
காதல் கோப்பை மேல் ரயிலைவிட்டு ஓட்டுவார் .
0 உலகக் கோப்பை ஒருபுறம் இருக்கட்டும்
இந்தியக் கோப்பைகளை பழுது பார்ப்போம்
இந்தியக் கோப்பைகளை பழுது பார்ப்போம்
0 அப்பம் முழுவதையும்
குரங்குகளே சொந்தமாகிக் கொண்டன
தேசியக்கொடி முழுவதிலும்
காவி நிறமே பரவிக்கொண்டது
குரங்குகளே சொந்தமாகிக் கொண்டன
தேசியக்கொடி முழுவதிலும்
காவி நிறமே பரவிக்கொண்டது
நடுவணின் தர்மச் சக்கரம்
சக்கராயுதமாய் மாறிப்போனது
சக்கராயுதமாய் மாறிப்போனது
அரசியல் சட்டத்தின் மத சார்பற்ற ஆணிகள்
அவசரமாய் பிடுங்கப் பட்டன
அவசரமாய் பிடுங்கப் பட்டன
நீங்கள் தான் விதைத்தீரகள்
இதோ அறுவடையைத் தொடங்குங்கள் .
இதோ அறுவடையைத் தொடங்குங்கள் .
0 இந்தியத் திட்டங்களைப் பரிசீலித்தால் அதற்கு
உலகக் கோப்பைகள் உடனடியாய் கிடைக்கும்
சாக்கடைகளை புனிதச் சக்கடைகளாகவும்
குப்பைகளை புனிதக் குப்பைகளாகவும்
சிறப்பு அறிவிப்பு செய்வது தூய்மை இந்தியா திட்டம்
உலகக் கோப்பைகள் உடனடியாய் கிடைக்கும்
சாக்கடைகளை புனிதச் சக்கடைகளாகவும்
குப்பைகளை புனிதக் குப்பைகளாகவும்
சிறப்பு அறிவிப்பு செய்வது தூய்மை இந்தியா திட்டம்
விரல்கள் பத்தும் மூலதனம் என்பது நாம்
உன் கையில் என்ன இருக்கிறது -
என்பது புனித நூல் திட்டம்
உன் கையில் என்ன இருக்கிறது -
என்பது புனித நூல் திட்டம்
பிள்ளையாரின் பிளாஸ்டிக் ஜர்சரி
கர்ணனின் மரபணுப் பிறப்பு
கண்டம் விட்டு கண்டம் ஏவல்
இது புனித அறிவியல் திட்டம்
கர்ணனின் மரபணுப் பிறப்பு
கண்டம் விட்டு கண்டம் ஏவல்
இது புனித அறிவியல் திட்டம்
செத்தால் அல்ல ..சுட்டால்தான் தியாகி
இது புனித சிலைத் திட்டம்
இது புனித சிலைத் திட்டம்
இந்தியத் திட்டங்களைப் பரிசீலித்தால் அதற்கு
உலகக் கோப்பைகள் உடனடியாய் கிடைக்கும்
உலகக் கோப்பைகள் உடனடியாய் கிடைக்கும்
0 திரிசூலத் தாண்டவம் தேசமெங்கும் நடக்கிறது
எதிர்கொள்ளும் ஆற்றல் சுத்தியலுக்கே இருக்கிறது
திரிசூலம் அழிக்கும் ஆயுதம்
சுத்தியல் ஆக்கும் ஆயுதம்
ஆயுதங்களை ஆக்கும் ஆயுதம்
சிவப்புப் ப்ந்துகளைச் சரியாக வீசினால்
காவிமட்டைகள் தெறித்துச் சிதறும்
எதிர்கொள்ளும் ஆற்றல் சுத்தியலுக்கே இருக்கிறது
திரிசூலம் அழிக்கும் ஆயுதம்
சுத்தியல் ஆக்கும் ஆயுதம்
ஆயுதங்களை ஆக்கும் ஆயுதம்
சிவப்புப் ப்ந்துகளைச் சரியாக வீசினால்
காவிமட்டைகள் தெறித்துச் சிதறும்
உலகக் கோப்பை விளையாட்டு ஒருபுறம் இருக்கட்டும்
ஒன்றுக்கும் உதவாத கோப்பைகளை உடைப்போம்
இந்தியக் கோப்பைகளை புதியதாய் படைப்போம்
ஒன்றுக்கும் உதவாத கோப்பைகளை உடைப்போம்
இந்தியக் கோப்பைகளை புதியதாய் படைப்போம்
இப்படி அருமையாக எழுதும் ராசி, எப்போதாவது எழுதினால் எப்படி?
ReplyDeleteதொடர்ந்து எழுதி தொடர்வாசகர்களை உருவாக்குங்கள்..
அடர்த்திமிக்க உங்கள் படைப்புகள் அனைவராலும் படிக்கப்படுவது அவசியம் என்பதையாவது நிறைவேற்றுங்கள் நண்பரே.
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete0 வாக்குறுதி கோப்பையேந்தி
ReplyDeleteவாசல்தோறும் வந்தவர்கள்
தங்கள் கோப்பைகளில்
அதிகாரத்தை நிரப்பினார்கள்......அருமையான வரிகள்