Wednesday, 19 June 2013

எனது முகநூல் பக்கங்கள்





1 இருண் ட காலமா ?

2004 ல் தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்குவதற்காக
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத துறையால் 

ஆதாரமாக கொள்ளப்பட்ட 
தமிழ் நூல்கள் 41.

பத்துப்பாட்டு -10
எட்டுத்தொகை -8
பதினெண் கீழ்கணக்கு --18
பெருங்காப்பியம் --2
(சிலப்பதிகாரம் ,மணிமேகலை )
தொல்காப்பியம் --1
முத்தொள்ளாயிரம் --1
புறப்பொருள் வெண்பாமாலை --1

இவற்றுள் 18ம் 2ம் ஆக 20 நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியவை . (ஏறத்தாழ 50%)

நாமோ கொஞ்சமும் கூசாமல் களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம் .

(வேறொன்றுமில்லை களப்பிரர்கள் புத்த சமண சமயங்களை ஆதரித்தார்கள் ..அவர்களும் அச்சமயங்களும் அகன்ற பின்னர் வந்த இந்து சனாதனிகள் திரித்து வைத்த சரடு அது .)



2 மகாப் பேறு 

மத்திய மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு
 6 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ளது .

இந்தியாவில் எந்த பெண் ஊழியருக்கும் 1942 வரை இவ்விடுப்பு கிடையாது .

அப்போது ஒரு பெண் ஊழியர் கருவுற்றால் தானாகவே முன்வந்து
பதவி விலகி விடவேண்டும் .

அப்படி தானாகவே முன்வந்து பதவி விலகிய ஒருவர்
குழந்தை பிறந்தபிறகு தங்கள் வசதிக்கேற்ப சிலகாலம் கழித்து
ீண்டும் வேலைக்கு விண்ணப்பித்து நியமனம் பெறலாம் .
மகப்பேற்றிற்காக பதவி விலகியவர்களுக்கு முன்னுரிமை உண்டு .

மகப்பேற்றிற்காக தானே பதவி விலகாதவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் .அவர்களுக்கு மீண்டும் வேலைகிடைக்காது .

1942ல் வைசிராய் நிர்வாக கவுன்சிலில் ஒருவர் தொழிலாளர் துறை
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மனிதாபிமானத்தோடு இப்பிரச்சினையை அணுகினார் .

பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை
அறிவித்தார் . பெண்மையின் அறிவையும் நலத்தையும் ஒருசேர பாதுகாத்தார் .சுதந்திர இந்தியாவிலும் அது இன்றுவரை தொடர்கிறது .

அந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் .


3 கக்கா ஒரு கழிவுச்சொல்லா 

0 ஏய் ஏய் ..கக்கா... அதை மிதிச்சிராதே
0 அம்மா ..பாப்பா கக்கா போயிட்டா பாரு
0 அய்யே .. கக்கா, அதைத் தொடாதே

இந்த உரையாடல்களில்' கக்கா' என்ற சொல் எதைக் குறிக்கிறது என நமக்குத் தெரியும் .

ஆந்திராவில் மாலா, மாதிகா, தெக்கலி .போன்ற ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர் வழிபடும் பெண் தெய்வத்தின் பெயர் கக்கா . வழிபாட்டின் அடிப்படையில் அம்மக்கள் 'கக்கா'க்கள் என அழைக்கப்பட்டனர் .

இன்றைக்கும் கக்கா வழிபாடு ஆந்திராவில் உண்டு .

பிழைப்பு தேடி கக்காக்கள் சென்னை வந்தபோது அவர்களுக்கு இங்கு கிடைத்தது துப்புரவுத் தொழில்தான் .குறிப்பாக கழிவறை சுத்தம் செய்யும் தொழில் .

இப்படித்தான் ஒரு தெய்வத்தின் பெயர் கழிவுச் சொல்லாய் தமிழகத்தில் ஆகிப்போனது .

இன்றைக்கும் ஆந்திராவில் கக்கா , கக்கன் (?), போன்ற பெயர்கள்
ஒடுக்கப்பட்ட மக்களிடையே புழக்கத்தில் உண்டு .
3

2 comments:

  1. இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத துறையால் செம்மொழிக்கு ஆதாரமாக கொள்ளப்பட்ட தமிழ் நூல்கள் 41இல், புறப்பொருள் வெ.மா.இல்லை என்று நினைக்கிறேன். அதற்குப் பதிலாக “இறையனார் களவியல்” தான் இருப்பதாக நினைவு. அன்புகூர்ந்து சரிபாருங்கள்.

    ReplyDelete
  2. எனது முந்திய கருத்துரையில் நான் குறிப்பிட்டிருப்பதிலும் ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. அது களவியல் நூலன்று. இறையனார் களவியல் நூலுக்கான உரை. ”சங்கப் புலவர் என்று நம்பப்படும் நக்கீரர் எழுதிய நம்ப இயலாத கற்பனை கலந்த கருத்துகளுடன் கூடிய உரைநூல்”என்பதே சரியாக இருக்கும்.

    ReplyDelete