எண்பதுகளில் எனது கவிதைகள் -3
1 அடுத்த ஊருக்கு வண்டி தள்ளும்
கழைக் கூத்தாடிகள்
வழித்துணையாய் நிலவு .
2 நட்சத்திர வெளிச்சத்தில்
ஓற்றைப்பாதை முடிகிறது
மயானப்புகையில் .
3 வெட்டவெளி
பால்பொழியும் நிலவு
குழந்தையின் பசிக்குரல்.
4 பெரிதாகிக்கொண்டே வருகிறது
தென்னங் கிளையில்
ஆட்டின் கடிவாய் .
5 பூர்ணிமை நிலவு
பனி விழும் இரவு
என் கல்லறையில் நீ .
6 மயானக்கூரை
காற்றில் தடதடத்தது
ஒப்பாரியின் பிரதிகள் .