எண்பதுகளில் எனது கவிதைகள் -2
1 .நதி நீரின் மீது
மெல்ல மிதந்து வருகிறது
அக்கரையின் மணியோசை
2 .வேகமாய் கீழே செல்லும்
தூறல் வரிகள்
நகரும் குடைகள்
3 .நான்குவரி மின்கம்பிகள்
வரிசையாய் குருவிகள்
எங்கே என் வயலின் ?
4 .நகரத்தின் சாலைகளில்
வெளிர் மஞ்சள் புகை
மின்சார அந்தி .
5 .கற்றை இருட்டில்
மனசெல்லாம் வெண்மை
எங்கோ மல்லிகை .
6 .பௌர்ணமி நிலவுக்கு பயந்து
அசையும் மரத்தடியில்
ஒளியும் நட்சத்திரங்கள் .
7 . பருந்தின் கை நழுவ
விழும் கோழிக்குஞ்சு
கீழே முள்பத்தை.
எண்பதுகளில் எழுதிய ஏழு ஹைக்கூக்களும் அருமை. தொடருங்கள் தோழா.. பாவலர் பொன்.க. புதுகை.
ReplyDelete