Wednesday 26 February 2014

இச்சாதாரி


நடு நிசியில் மடல் அவிழும் 
தாழையின் உடலேறி 
ஊர்ந்து நழுவி 
ஊர்ந்து நழுவி 

இச்சாதாரி 
இசைக்கும் பண்ணில் 

இரவின் வனமெங்கும் 
குளிரோடு தாழை வீச 

நட்சத்திர அகல்கள்
நடுங்கிக் கண் செருக

பனியின் தூபத்தில்
வெந்தனல் கமழ

முயங்க நோக்கும்
ஊரெல்லாம் ...!

1 comment:

  1. வணக்கம் சார்... உங்களின் வலைப்பூவால் இன்று வலைச்சரம் சிறக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...நன்றி

    ReplyDelete