Monday 8 August 2011

MY POEMS

எண்பதுகளில் எனது கவிதைகள் 

1 படிவம் 


    பெயர் ;
   ஆண் /பெண் ;
   பிறந்த தேதி ;
   மதம் ;
   சாதி ;
   தாழ்த்தப்பட்டவரா ?
   ஆம் எனில் 
   யாரால் ?
   எப்போதுமுதல் ?.


2  இலைகளை விலக்கி
   தேடும் காற்று
   குயிலின் பாட்டை.

2  தவளை 
    தண்ணீருக்குள் தாவ 
    தடுமாறியது நிலா .

4  நான் மழையை 
    ரசித்துக்கொண்டிருக்கிறேன் ,
    தயவு செய்து
    யாரும் என்னை
    நனைத்து விடாதீர்கள் 

பூஞ் செடிகளைச்சுற்றி
  அரும்பியிருக்கும் 
  சின்னச்சின்ன புற்களை 
  நான் பிடுங்குவதேயில்லை 

அசைந்தபடி ஊ ஞ்சல்  
   பாதி தொடுத்த பவளமல்லி
  மிதந்த படி குளித்த வாசம் 
  மெல்லத் தேயும் கொலுசொலி 
  ஒ என்னைக்கண்டதுந்தான்
  நாணத்துடன் 
  எழுந்து போயிருக்கிறாள்,
  மீதமுள்ள பூக்களில் 
  எனக்காக
  தன புன்னகை முகத்தை 
  வைத்துவிட்டு .





1 comment: